Skip to main content

பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
எட்டுத்தொகைபத்துப்பாட்டு
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணைகுறுந்தொகை
ஐங்குறுநூறுபதிற்றுப்பத்து
பரிபாடல்கலித்தொகை
அகநானூறுபுறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படைபொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டுமதுரைக்காஞ்சி
நெடுநல்வாடைகுறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலைமலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார்நான்மணிக்கடிகை
இன்னா நாற்பதுஇனியவை நாற்பது
களவழி நாற்பதுகார் நாற்பது
ஐந்திணை ஐம்பதுதிணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபதுதிணைமாலை நூற்றைம்பது
திருக்குறள்திரிகடுகம்
ஆசாரக்கோவைபழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்முதுமொழிக்காஞ்சி
ஏலாதிகைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம்சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள்சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள்சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள்சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள்சங்ககால மலர்கள்
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள்என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படைபொருநராற்றுப்படைசிறுபாணாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படைமுல்லைப்பாட்டுமதுரைக் காஞ்சிநெடுநல்வாடைகுறிஞ்சிப் பாட்டுபட்டினப் பாலைமலைபடுகடாம்ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு எனச் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் பிற்காலத்தில் எழுந்ததென்பதே பலரது கருத்து. இந்த அரிய தொகுப்புக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.

பத்துப் பாட்டால் அறியலாகும் செய்திகள்[தொகு]

இத் தொகுதியிலுள்ள நூல்கள் சங்க இலக்கியங்களுள் சிறப்பிடம் பெறுபவை. இவற்றில் பழந்தமிழ் நாட்டின் வாழ்க்கைமுறை, பண்பாடு பற்றிய பல அரிய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. வரலாற்றுச் சம்பவங்கள், அரசர்களினதும் வள்ளல்களினதும் இயல்புகள், பொது மக்களின் காதல் வாழ்க்கை, அக்காலக் கலைகள்நகரங்கள் பற்றிய தகவல்கள், இயற்கை பற்றிய வருணனைகள் போன்றவை தொடர்பான பல தகவல்களை இவற்றிலிருந்து பெற முடிகின்றது. பத்துப் பாட்டு நூல்களில் இயற்கைக்கு முரண்பட கற்பனைகளோ பொருந்தா உவமைகளோ காணப்பெறவில்லை. பண்டைத் தமிழ்ர் வாழ்வை உள்ளது உள்ளபடிக் கட்டும் காலக் கண்ணாடியாக இவை விளங்குகின்றன.

வாய்பாட்டுப் பாடல்[தொகு]

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து
என வரும் பழம்பாடல், பத்துப் பாடு நூல்கள் எவை என்பதை மிகத் தெளிவாகக் காட்டும்.

அடிவரையறை[தொகு]

இத் தொகுப்பிலுள்ள பத்து நூல்களும் நீண்ட அகவற் பாக்களால் ஆனவை. இவற்றுள் 103 அடிகளைக் கொண்டமைந்த முல்லைப் பாட்டுக்கும், 782 அடிகளையுடைய மதுரைக் காஞ்சிக்கும் இடைப்பட்ட நீளங்களைக் கொண்டவையாக ஏனைய நூல்கள் அமைந்துள்ளன. 
"நூறடிச் சிறுமை நூற்றுப் பத்தளவே
ஏறிய அடியின் ஈரைம் பாட்டு
தொடுப்பது பத்து பாட்டெனப் படுமே
அதுவே, அகவலின் வருமென அறைகுவர் புலவர்".-(பன்னிருபட்டியல் 266-267) என்பது இதன் இலக்கணமாகும்.

பதிப்புகள்[தொகு]

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல்கள் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1889 ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலர் முழு தொகுதியாகவும், இதிலுள்ள நூல்களிற் சிலவற்றைத் தனித் தனியாகவும் புதிய உரைகளுடன் வெளியிட்டுள்ளனர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

தமிழிலக்கிய வரலாறு. ஜனகா பதிப்பகம்.1996

வழிசெலுத்தல் பட்டி

Comments

Popular posts from this blog

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

எட்டுத்தொகை