தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.
தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.
தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.
வீரமாமுனிவர்.
தமிழில் வீரமாமுனிவர் என்று அழைக்கப்படும் பெஸ்கி பாதிரியார் (1680- 1746) இத்தாலியில் பிறந்தவர். கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் பொருட்டு, 1710ம் ஆண்டில் தமிழகத்துக்கு வந்தார். தமிழின் மீது இருந்த பற்றால் தனது பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். எழுத்து, அகரமுதலி, மொழிபெயர்ப்பு, உரைநடை, இலக்கணம், காவியம், பிரபந்தம் என்று பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். திறக்குறளை லத்தீனுக்கு மொழி பெயர்த்தார்.
ஆறுமுக நாவலர்
தமிழ், ஆங்கிலம், வடமொழிகளில் திறம் பெற்றவர் ஆறுமுக நாவலர் (1822 1879). யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். பாதிரியார் பீட்டர் பெர்சிவல் பைபிளை தமிழில் மொழிமாற்றம் செய்ய இவரிடம் கோரினார். இப்பணிக்கு ஆறுமுக நாவலரே தகுதியுடையவர் என்று அவர் தீர்மானித்தார். சைவ சிந்தாந்தத்தில் கைதேர்ந்த ஆறுமுக நாவலரின் பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு அறிஞர்களை வியப்புறச் செய்தது. தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்களை அச்சேற்றியவர் ஆறுமுக நாவலர்.
உ.வே.சா.,
தமிழ்த்தாத்தா என்று அன்புடன் அழைக்கப்பட்ட, உ.வே.சாமிநாத அய்யர் (1855-1942), அழியும் நிலையில் இருந்த, பண்டைய இலக்கிய நூல்களைத் தேடி அச்சிட்டு தமிழின் தொன்மையையும் புகழையும் உலகறியச் செய்தார். 90 புத்தகங்களுக்கு மேல் அச்சிட்ட இவர், 3 ஆயிரம் ஏட்டுச்சுவடி, கையெழுத்தேடுகளையும் வைத்திருந்தார்.
சீவக சிந்தாமணி எனும் சமண இலக்கியத்தின் செழுமையை முழுதாக உணர்ந்ததால், இது போன்ற அரிய படைப்புகளை அழிய விடாமல் காக்க வேண்டும் என்று உறுதி கொண்டார். சீவக சிந்தாமணிக்குப் பின்னர், பத்துப்பாட்டு நூலையும் இவர் வெளியிட்டார்.
சோழவந்தான் அரசஞ் சண்முகனார்
மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய அரசஞ் சண்முகனார் (1862-1909), பள்ளியில் ஆங்கில வகுப்புகளை அதிகப்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெளியேறினார். தலைமை ஆசிரியர் எவ்வளவோ முயன்றும், மீண்டும் பணிக்குத் திரும்ப மறுத்துவிட்டார். மதுரை பாண்டித்துரைத் தேவர், நான்காவது தமிழ்ச்சங்கத்தில் பணியாற்ற அழைத்தார். 1902 முதல் 1906 வரை நான்காண்டுகள் அச்சங்கத்தில் அரும்பணி ஆற்றினார். சிதம்பர விநாயகர் மாலை எனும் நூல் இவரால் இயற்றப்பட்டது.
சங்கரதாஸ் சுவாமிகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலே, ஆங்கில மோகத்தில், தமிழில் பேசுவது கூட கவுரவக் குறைவு என்று கருதிய போது, சங்கரதாஸ் சுவாமிகள் (1866 - 1931) மேடைகளில் தமிழ் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டார். அப்போது இசையரங்குகளில் தெலுங்கு ஆதிக்கம் இருந்தது. இனிய செந்தமிழ்ப் பாடல்களை இவர் இயற்றி, தமிழுக்குப் பெருமை சேர்த்தார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இவரது, பாடல்களை, வசனத்தை உச்சரிக்காத நடிகர்கள் இல்லை என்று கூறலாம். தூத்துக்குடியில் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள், மதுரையில் 'தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா' நாடக சபா மூலம் அற ஒழுக்கத்தையும் கடவுள் உண்மையையும் வளர்த்தார்.
தமிழில் வீரமாமுனிவர் என்று அழைக்கப்படும் பெஸ்கி பாதிரியார் (1680- 1746) இத்தாலியில் பிறந்தவர். கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் பொருட்டு, 1710ம் ஆண்டில் தமிழகத்துக்கு வந்தார். தமிழின் மீது இருந்த பற்றால் தனது பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். எழுத்து, அகரமுதலி, மொழிபெயர்ப்பு, உரைநடை, இலக்கணம், காவியம், பிரபந்தம் என்று பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். திறக்குறளை லத்தீனுக்கு மொழி பெயர்த்தார்.
ஆறுமுக நாவலர்
தமிழ், ஆங்கிலம், வடமொழிகளில் திறம் பெற்றவர் ஆறுமுக நாவலர் (1822 1879). யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். பாதிரியார் பீட்டர் பெர்சிவல் பைபிளை தமிழில் மொழிமாற்றம் செய்ய இவரிடம் கோரினார். இப்பணிக்கு ஆறுமுக நாவலரே தகுதியுடையவர் என்று அவர் தீர்மானித்தார். சைவ சிந்தாந்தத்தில் கைதேர்ந்த ஆறுமுக நாவலரின் பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு அறிஞர்களை வியப்புறச் செய்தது. தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்களை அச்சேற்றியவர் ஆறுமுக நாவலர்.
உ.வே.சா.,
தமிழ்த்தாத்தா என்று அன்புடன் அழைக்கப்பட்ட, உ.வே.சாமிநாத அய்யர் (1855-1942), அழியும் நிலையில் இருந்த, பண்டைய இலக்கிய நூல்களைத் தேடி அச்சிட்டு தமிழின் தொன்மையையும் புகழையும் உலகறியச் செய்தார். 90 புத்தகங்களுக்கு மேல் அச்சிட்ட இவர், 3 ஆயிரம் ஏட்டுச்சுவடி, கையெழுத்தேடுகளையும் வைத்திருந்தார்.
சீவக சிந்தாமணி எனும் சமண இலக்கியத்தின் செழுமையை முழுதாக உணர்ந்ததால், இது போன்ற அரிய படைப்புகளை அழிய விடாமல் காக்க வேண்டும் என்று உறுதி கொண்டார். சீவக சிந்தாமணிக்குப் பின்னர், பத்துப்பாட்டு நூலையும் இவர் வெளியிட்டார்.
சோழவந்தான் அரசஞ் சண்முகனார்
மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய அரசஞ் சண்முகனார் (1862-1909), பள்ளியில் ஆங்கில வகுப்புகளை அதிகப்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெளியேறினார். தலைமை ஆசிரியர் எவ்வளவோ முயன்றும், மீண்டும் பணிக்குத் திரும்ப மறுத்துவிட்டார். மதுரை பாண்டித்துரைத் தேவர், நான்காவது தமிழ்ச்சங்கத்தில் பணியாற்ற அழைத்தார். 1902 முதல் 1906 வரை நான்காண்டுகள் அச்சங்கத்தில் அரும்பணி ஆற்றினார். சிதம்பர விநாயகர் மாலை எனும் நூல் இவரால் இயற்றப்பட்டது.
சங்கரதாஸ் சுவாமிகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலே, ஆங்கில மோகத்தில், தமிழில் பேசுவது கூட கவுரவக் குறைவு என்று கருதிய போது, சங்கரதாஸ் சுவாமிகள் (1866 - 1931) மேடைகளில் தமிழ் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டார். அப்போது இசையரங்குகளில் தெலுங்கு ஆதிக்கம் இருந்தது. இனிய செந்தமிழ்ப் பாடல்களை இவர் இயற்றி, தமிழுக்குப் பெருமை சேர்த்தார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இவரது, பாடல்களை, வசனத்தை உச்சரிக்காத நடிகர்கள் இல்லை என்று கூறலாம். தூத்துக்குடியில் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள், மதுரையில் 'தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா' நாடக சபா மூலம் அற ஒழுக்கத்தையும் கடவுள் உண்மையையும் வளர்த்தார்.
பரிதிமாற் கலைஞர்எனும் சூரியநாராயண சாஸ்திரி (1870-1903).
தமிழ் மொழி தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது என்றவர்.
இவர், கல்லூரியில் படிக்கும் போதே, ஆசிரியர்களால் வியந்து பாராட்டப்பட்டவர். மதுரைக் கல்லூரியில் இவர் படித்த போது, இயற்றிய மாலா பஞ்சகம் என்ற நூலை பார்த்த பாஸ்கர சேதுபதி, அவருடைய உயர்கல்விக்கான செலவை ஏற்றுக் கொண்டார்.
சென்னை கிறிஸ்தவ கல்லூரி தலைவர் டாக்டர் மில்லர், டென்னிசன் இயற்றிய ஆர்தரின் இறுதி எனும் நூலின் ஒரு பகுதியை விளக்கினார். 'துடுப்புகள் இருபுறமும் தள்ள, நீரில் மிதந்து செல்லும் படகு, அன்னப்பறவை தன் சிறகு விரித்து விசிறிக் கொண்டு நீந்துவது போல் இருக்கிறது' என்ற உவமை வேறு எந்த மொழியிலும் இடம் பெற்றிருக்குமா என்பது சந்தேகம், என்றார்.வகுப்பில் இருந்த சூரிய நாராயண சாஸ்திரி, 'முடிகின நெடுவாய் முரிதிரை நெடுநீர்வாய்க் கடிதினின் மடவண்ணக் கழியது செல நின்றார்' எனும் 9 நூற்றாண்டுக்கு முந்தைய கம்பரின் உவமை நயத்தை டென்னிசனுக்கு,சாஸ்திரி விளக்கினார். அதைக்கேட்ட மில்லர் அவருக்கு கைகொடுத்துப் பாராட்டினார். மதுரை அருகே வீராச்சேரியில் பிறந்த அவர், கல்லூரி பேராசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியராகவும் விளங்கிய அவர், தனித்தமிழ் உணர்வுக்கு வித்திட்டவர் ஆவார்.
தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றது என்று உரை நிகழ்த்தினார். எழுதி வந்தார். தன்னுடைய பெயரையும் தூய தமிழில் பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்டார்.
பரிதிமாற் கலைஞர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க நூல்கள் பின்வருமாறு:
ரூபவதி,கலாவதி,மான விஜயம்,தனிப்பாசுரத் தொகை,பாவலர் விருந்து,மதிவாணன்,நாடகவியல்,தமிழ் விசயங்கள்,தமிழ் மொழியின் வரலாறு,சித்திரக்கவி விளக்கம்,சூர்ப்ப நகை - புராண நாடகம்.
பதிப்பித்த நூல்கள்:
சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898); மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898); புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899); உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901).
சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898); மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898); புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899); உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901).
பாம்பன் சுவாமிகள்
முருகப்பெருமான் மீது பாட வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பாம்பன் சுவாமிகள் (1851-1929) பாடிய 'பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்' பாடினார்.சிவஞான தீபம் வேதாந்த சித்தாந்தப் பாட்டினை திறம்படவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் நூல் 1922 அச்சிடப்பட்டு வெளியானது. ஆயிரத்து 101 பாடல்களுக்கு பாம்பன் சுவாமிகளே உரை எழுதி 'திட்பம்' என்று பெயர் சூட்டி வெளியிட்டார்.ராமநாதபுரம் பாம்பனில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே ஏட்டில் முருகப்பெருமான் பற்றி பாடல்களை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். வடசொல் இல்லாத 'சேந்தன் செந்தமிழை' இவர் படைத்தார். இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது.
முருகப்பெருமான் மீது பாட வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பாம்பன் சுவாமிகள் (1851-1929) பாடிய 'பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்' பாடினார்.சிவஞான தீபம் வேதாந்த சித்தாந்தப் பாட்டினை திறம்படவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் நூல் 1922 அச்சிடப்பட்டு வெளியானது. ஆயிரத்து 101 பாடல்களுக்கு பாம்பன் சுவாமிகளே உரை எழுதி 'திட்பம்' என்று பெயர் சூட்டி வெளியிட்டார்.ராமநாதபுரம் பாம்பனில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே ஏட்டில் முருகப்பெருமான் பற்றி பாடல்களை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். வடசொல் இல்லாத 'சேந்தன் செந்தமிழை' இவர் படைத்தார். இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது.
நா.கதிரைவேற்பிள்ளை.
நா.கதிரைவேற்பிள்ளை (1874-1907) யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் வந்து, தமிழ்ப்பணிக்கும் சைவப்பணிக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைக் கவனிக்கும் – அவதானிக்கும் – ஆற்றல் படைத்தவர். ஆகையால் இவரை சதாவதானி என்ற சிறப்புப் பட்டத்துடனேயே குறிப்பிடுவர்.
இச்சென்னையில், சதாவதானம் , (அதாவது நூறு விஷயங்களை ஏக காலத்தில் கவனமாய்ச் செய்தல்) ஆச்சரியமான பெரு ஞாபகத்தைக் காட்டினார். அக்காலத்திலங்கு வந்திருந்த வித்துவான்கள் முன்னிலையில் அபரிமிதமான வரிசைகளுடைய எண்களின் தொகைகளையும், மிகக் கஷ்டமான தமிழ்ச் செய்யுட்களைச் சொல்லியும், அநேகர் பிரமிக்கும்படியான கேள்விகட்குச் சிறிதும் தாமதமும், சந்தேகமில்லாதும், கலவரப்படாமலும் விடையிறுத்திய பின்னர்தான் சதாவதானியென்ற பெயரால் வித்வத்சிரோமணிகளால் அழைக்கப்பட்டார். அவர் அநேக நூல்களைச் செய்திருப்பவராயிருந்தாலும் அவற்றுள் மிக்க அருமையும் எவரும் தெரிந்துகொள்ளும்படியாய் வெளியாகியது தமிழ்ப் பேரகராதியே. தம்வேலைகளில் மிக்க ஊக்கமும் ஜாக்கிரதையுமுடையவர்.
இரு மொழி அகராதி இருந்தபோதிலும், தமிழுக்கு ஒரு மொழி அகராதி வெளிவராமல் இருந்தது. அந்த குறையை போக்கும் வண்ணமாக அவர் வெளியிட்ட அகராதி, தமிழ் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது. கதிரைவேற்பிள்ளையின் 'சுப்பிரமணிய பராக்கிரமம்' என்ற நூலின் அடிப்படையில் தான் பழநி தண்டாயுதபாணி கோயிலில் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு தலப்புராணங்களை இவர் இயற்றியுள்ளார். மதுரை தமிழ்ச்சங்கப் புலவராகவும் அவர் இருந்துள்ளார்.
கதிரைவேற் பிள்ளை இயற்றிய நூல்கள்:-
தமிழ்ப் பேரகராதி, அதிவீரராம பாண்டியனாரின் கூர்ம புராணத்துக்கு விளக்க உரை, பழநித் தல புராண விருத்தியுரை, சித்திரக் கவிகள்: கமலபந்தனம், கோபுர பந்தனம், ரத பந்தனம், இரட்டை நாக பந்தனம், சிலேடை வெண்பா, யமகம் நிறைந்த கட்டளைக் கலித்துறை வெண்பா, கருவூர் மான்மியம் (மஹாத்மியம்), சீட்டுக் கவிகள் பல எழுதியுள்ளார்.
வ.உ.சிதம்பரனார் (1872-1936)
எண்ணி எண்ணிப் பெருமைப் படத்தக்க வகையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விடுதலை வீரர், செக்கிழுத்த செம்மல் வ.உ. சி அவர்கள் வழக்கறிஞர் என்ற தொழிலோடு தமிழிலும் சிறந்தப் புலமைப் பெற்றிருந்தார்.
ஆங்கிலப் புலமைக் கொண்டதால் ஜேம்ஸ் ஆலன் எழுதிய சில நூல்களை தமிழில் மொழி பெயர்த்தார்.மனம்போல் வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம் என பெயர்சூட்டி வெளியிட்டார். மூல நூல்களைப் போலவே இந்த மொழிபெயர்ப்பு நூல்களைப் படிப்பவர்களும் அருமையை உணர்ந்து கொள்ளலாம்.
கவிதை வடிவில்: மெய்யறம்,மெய்யறிவு, பாடல் திரட்டு, சுயசரிதை உரை வடிவில்: இன்னிலை, சிவஞான போதம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு உரை எழுதி உள்ளார். பதிக்கப்பட்ட நூல்களாக: திருக்குறள் (மணக்குடவர் உரையுடன்), தொல்காப்பியம் (இளம்பூரனார் உரையுடன்)
கவிதை வடிவில்: மெய்யறம்,மெய்யறிவு, பாடல் திரட்டு, சுயசரிதை உரை வடிவில்: இன்னிலை, சிவஞான போதம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு உரை எழுதி உள்ளார். பதிக்கப்பட்ட நூல்களாக: திருக்குறள் (மணக்குடவர் உரையுடன்), தொல்காப்பியம் (இளம்பூரனார் உரையுடன்)
கட்டுரை வடிவில்: கடவுளும் பக்தியும், கடவுள் ஒருவரே,மனிதனும் அறிவும், மனமும் உடம்பும், வினையும் விதியும், விதி அல்லது ஊழ் எனவும்,
அது தவிர அரசியல் சொற்பொழிவாளராக, ‘எனது அரசியல் பெருஞ்சொல்’ என்ற தலைப்பிலும், மொழி பெயர்ப்பாளராக, ‘மனம் போல வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் என்றும், செய்தித் தாள் ஆசிரியராக, விவேகபானு, இந்து நேசன், தி நேஷனல் போன்ற நிறுவனங்களிலும் பணியாற்றினார்.
பம்மல் சம்பந்த முதலியார் (1873 - செப்டம்பர் 24, 1964).
வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.
எழுபது ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடக வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றி தமிழ் மக்களால் 'தமிழ் நாடகத் தந்தை' என்று அழைக்கப்பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார் (1873-1964).வழக்கறிஞர் தொழில் செய்து கொண்டே, வாடி வதங்கிப் போய் இருந்த நாடகத் துறைக்கு புத்துயிர் ஊட்டியவர் இவர். மேலை நாட்டு நாடகங்கள், வடமொழி நாடகங்களை ஆழமாகப் படித்தார். மொழிநடை மற்றும் உரையாடல்களில் வித்தியாசமான பாணியைப் பின்பற்றினார். தொடர்ந்து நாடகக் கலைக்கு தெம்பூட்டி வந்தார். இவர் எழுதிய முதல் நாடகம் 'புஷ்பவல்லி' மக்கள் ஆதரவைப் பெற்றது. அதன் பின்னர் அவர் ஏராளமான நாடகங்களை எழுதிக் குவித்தார்.

நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார். கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஷேக்ஸ்பியரின் Hamlet, As You like it, Macbeth, Cymbeline, Merchant of Venice என்ற நாடகங்களை அவைகளின் சுவையோ நயமோ குறையாமல் 'அமலாதித்யன்', 'நீ விரும்பியபடியே', 'மகபதி', 'சிம்மளநாதன்', 'வணிபுர வாணிகன்' என்ற பெயர்களில் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார்.
பம்மல் சம்பந்த முதலியாரின் பல நாடகங்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன.
நாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார்.
சதாவதானி செய்குத்தம்பி பாவலர்.
முகமதியப் புலவராக இருந்து, அனைத்து சமயத் தத்துவ ஆழங்களை உணர்ந்து உரைக்கும் செறிவு கொண்டவராக செய்குத்தம்பி பாவலர் (1874-1950) விளங்கினார்.கதராடை மற்றும் காந்தி குல்லாயும் அணிந்து, விடுதலை உணர்வையும் பரப்பினார். இசுலாமிய மித்திரன் எனும் இதழை நடத்தினார். சீறாப்புராணத்துக்கு உரை எழுதினார். அந்தாதிகள், கோவைகள், பாமாலை, மஞ்சரி, நீதி வெண்பா மற்றும் பல்வேறு உரைநடை நூல்களையும், ஆனந்த களிப்பு எனும் மொழிபெயர்ப்பையும், சாற்றுக் கவிகள், வாழ்த்துக்கவிகள், சிலேடைக் கவிகள், சீட்டுக் கவிகள் எனப் பன்னூறு பாக்களையும் அளித்துள்ள பாவலரின் பெருமை தமிழின் பெருமையாகவே உள்ளது.
சிறந்த தமிழறிஞராகிய பாவலர் அவர்கள், நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, திருக்கோப்பற்றுப் பதிஞ்சம், பத்தந்தாதி, திருமதினந்தந்தாதி, கோப்பந்துக் கலம்பகம், கோப்பந்துப் பிள்ளைத் தமிழ், கவ்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை, நீதி வெண்பா, ஷம்சுத்தாசின் சேவை போன்ற கவிதை நூல்களையும், தேவலோக பழிக்குள்ள வழக்கு, வேதாந்த விபசார பழிக்குள்ள வழக்கு போன்ற வசன நடை காவியங்களையும் எழுதியவர்.
தேசிக விநாயகம் பிள்ளை
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் (1876-1954) சொற்பொழிவுகளும், உரைநடைகளும் 'கவிமணியின் உரைமணிகள்' என நூல் வடிவம் பெற்றன. உமார்கய்யாம், ஆசியஜோதி ஆகியன இவரது மொழிபெயர்ப்புப் பாடல்கள். நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் எனும் பழமைவாதத்துக்கு எதிராக கவிதை பூண்டவர் கவிமணி. கவிதைக்கு இலக்கணம் சொன்ன கவிமணி... கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று பாடியிருக்கிறார்...

உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை.
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.
மறைமலை அடிகள்
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்... உற்ற தேகத்தை உடல் மறந்தாலும்... எனும் வள்ளல் ராமலிங்க அடிகளாரின் பாடலை பாடிக் கொண்டிருந்த மறைமலை அடிகளார் (1876-1950), இடையில் நிறுத்தி - 'உற்ற யாக்கையை உடல் மறந்தாலும்' என்று பாடியிருந்தால் சிறப்பாக இருக்குமே என்று கருதினார். தேகம் என்ற வடமொழிச் சொல் நீங்கி, யாக்கை எனும் தூய தமிழ் சேரும் என்பதால் மகிழ்வுற்றார். அந்த தினத்திலிருந்து வேற்று மொழி கலவாமல் தமிழ் பேசுவோம் என்று தன் குடும்பத்தாரிடம் கூறினார். இதுவே, அவரது தனித்தமிழ் இயக்கத்தை வலுவூட்டியது. சுவாமி வேதாச்சலம் என்ற தனது பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் என்றிருந்த அவரது அமைப்பை 'பொது நிலைக்கழகம்' என்றும் மாற்றிக் கொண்டார்.
மு.ராகவையங்கார்
ராகவையங்கார் (1878-1960) வரலாற்று ஆய்வில் வரலாறு படைத்தவர் என்று போற்றப்பட்டவர். இலக்கிய ஆய்வில் புகழ்பெற்றவர். சிலாசனங்களை வெளியிட்டவர். செந்தமிழ் எனும் இதழில் 'வீரத்தாய்மார்' என்று எழுதிய கட்டுரைக்கு பாரதியே பாராட்டி எழுதியிருந்தார். 'இருளிலேயே மூழ்கிக் கிடக்கும் பாரத வாசிகளுக்கு, மகாபாரதம் காட்டத் தோன்றியிருக்கும் சோதிகளில், உங்கள் நெஞ்சிற் பிறந்திருக்கும் நெருப்பு ஒன்றாகும்' என்று பாராட்டி எழுதினார். வேளிர் வரலாறு, ஆழ்வார்களின் கால நிலை, சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட நூல்களை படைத்தவர் ராகவையங்கார்.
சாயுபு மரைக்காயர்
தமிழ், அரபு, மலாய் ஆகிய மூன்று மொழிகளிலும் திறம் பெற்றிருந்த இப்பெரும் புலவர், தமிழின் அனைத்து வகை யாப்புகளிலும் பாடல்களை அமைத்தவர் சாயுபு மரைக்காயர் (1878-1950). இவர் அமுதகவி என்றும் அழைக்கப்பட்டார். சித்த மருத்துவம், யுனானி மருத்துவம் ஆகியவற்றிலும் இவர் சிறந்து விளங்கினார். மனோன்மணிக் கும்மி, உபதேசக் கீர்த்தனம், மும்மணி மாலை ஆகிய நூல்கள் சாயுபு மரைக்காயரின் தமிழாற்றலை வெளிக்காட்டுகின்றன. தமிழ் மொழிக்கும் இஸ்லாமிய இலக்கியத்துக்கும் தொண்டாற்றியவர்.
இராஜாஜி
சோக்ரதர், கண்ணன் காட்டிய வழி, குடிகெடுக்கும் கள், மார்க்கச அரேலியசர் உபதேச மொழிகள், ராஜாஜி குட்டிக் கதைகள், உபநிஷ பலகணி, திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகிய அனைத்தும் ராஜாஜியின் (1878-1972) படைப்புகள். வியாசர் விருந்து, சக்கரவர்த்தி திருமகன் ஆகிய இவரது நூல்கள் விற்பனையில் சாதனை படைத்தன. மகாபாரதமும்... ராமாயணமும் தமிழில் எழுதியதை, கவர்னர் ஜெனரல் பதவியை விட முக்கியமாக ராஜாஜி ஒரு முறை குறிப்பிட்டார்.விவேகானந்தர் மற்றும் பாரதியால் பாராட்டுப் பெற்றவர் ராஜாஜி. பின்னாளில் மூதறிஞர் என்று அழைக்கப்பட்டார்.
நாவலர் சோமசுந்தர பாரதியார்
வ.உ.சி.,யால் 'தமிழ்க் கப்பல்' என்று வர்ணிக்கப்பட்டவர் நாவலர் சோமசுந்தர பாரதியார் (1879 - 1959). வழக்கறிஞராகப் பணியாற்றி மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்தவர். வ.உ.சி.,யின் அழைப்பை ஏற்று மாதம் 100 ரூபாய் ஊதியம் பெற்று கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்தார். தேசப்பற்று காரணமாக அவர் அதை செய்தார்.இந்தி எதிர்ப்புத் தந்தை என்று இவரைக் குறிப்பிட்டால் மிகையில்லை. ராஜாஜி இந்தியை தேசிய மொழி என்ற போது, நாவலரோ 'இந்தி தேசிய மொழியா' என்று கேள்வி எழுப்பி புத்தகம் வெளியிட்டார். சிறிய நூல் என்றாலும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கட்டாய இந்தி திணிப்பு, தமிழ் மொழிக்கு எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு வெளிப்படையான கடிதம் எழுதினார்.
வ.வே.சு. ஐயர்
தமிழில் திறனாய்வுத் துறை வளம் பெறவும், சிறுகதைத் துறை வளரவும் உந்து சக்தியாக விளங்கியவர் வ.வே.சு.ஐயர் (1881 -1925). புதுச்சேரியில் இவர் அமைத்த, கம்ப நிலைய இயக்கத்தில் பாரதியாரும் சேர்ந்தார். கம்ப நிலையத்திலிருந்து ஏராளமான நூல்கள் வெளியாகின. மொழிபெயர்ப்புகளும் வெளிவந்தன. தேச விடுதலைக்காக எழுதிய இவர், பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்ட போது, கம்பராமாயணம் குறித்த ஆங்கில திறனாய்வை எழுதினார். ஆங்கிலத்தில் குறுந்தொகையை எழுதினார். 44 வயதிலேயே அவர் மறைந்துவிட்டார்.
மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியாரை (1882-1921) அறியாத தமிழ் மக்கள் இருக்க முடியாது. தமிழ்ப் பணியையும் விடுதலைப் பணியையும் ஒன்றாக பார்த்த அவர், மொழிப்பற்றை வளர்த்தவர். குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய மூன்று குறுங்காவியங்களை அவர் இயற்றினார். வ.வே.சு. ஐயர் இவரது பாடல்களை அட்சரம் லட்சம் பெறுமான பாக்கள்... அவை மனதை ஈர்க்கும் மாணிக்கங்கள் என பாராட்டினார். மகாகவி பாரதியார் ஆங்கிலக் கவிஞரான ஷெல்லியிடம் பேரார்வம் கொண்டிருந்தார். எங்கள் தமிழ்மொழி, எங்கள் தமிழ் மொழி என்று மொழியின் மீது தீராப்பற்றுக் கொண்டிருந்தவர் அவர்.
திரு.வி.க.,
பெரிய புராணத்துக்கு குறிப்புரையும் வசனமும் எழுதியவர் திரு.வி.க., (1883-1953). யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை மீது கொண்டிருந்த பற்றால், அவர் கதிரைவேற்பிள்ளை சரிதம் என்ற நூலை எழுதினார். பட்டினத்துப் பிள்ளையார் பாடல் திரட்டு, தேச பக்தாமிர்தம், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், நாயன்மார் திறம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், முருகன் அல்லது அழகு, திருக்குறள் விரிவுரை, உள்ளொளி உள்ளிட்ட ஏராளமான படைப்புகளை வழங்கியவர். மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும். மேலும், மேலும் தமிழகத்துக்கு தொண்டாற்ற வேண்டும். தமிழர்களை ஒருமுகப்படுத்த வேண்டும் என்று கருதிய அவர் தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்பட்டார்.
இராமலிங்கம் பிள்ளை
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை (1888 - 1972) தெய்வ பக்தியும் தேச பக்தியும் நிறைந்தவர். காந்தியக் கவிஞர் என்று போற்றப்பட்டவர். ''கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது... சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்'' என்று பாடியவர். ''தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய மொழியாகும், அன்பே அவனுடை வழியாகும்'' என்று பாடியவர். தமிழருக்கும் விடுதலை வீரர்களுக்கும் பாடிப் பெருமை சேர்த்தவர் அவர். காவலரின் மகனாகப் பிறந்த கவிஞர், தமிழ்க் காவலராக விளங்கினார்.
கோவைக்கிழார் ராமச்சந்திரன் செட்டியார்
கல்வெட்டுத் துறையில் ஆய்வு செய்து நூல்களை வெளியிட்டவர் கோவைக்கிழார் என்று அழைக்கப்பட்ட ராமச்சந்திரன் செட்டியார் (1888 - 1969). சேக்கிழாரும் கல்வெட்டும், நால்வர்களும் கல்வெட்டும், கல்லும் பேசுகிறது ஆகிய கல்வெட்டாய்வு நூல்களை படைத்தார். வெளிமாநிலங்களுக்குச் சென்றும் கல்வெட்டுகளை ஆய்வு செய்து, வரலாற்றுக்குப் புதிய தகவல்களை சேகரித்துத் தந்தவர் இவர். அறநிலையத் துறையில் ஆணையர் பொறுப்பும் வகித்தார். கோவைப் பகுதியில் இவர் பங்கேற்காத மாநாடுகளோ, அரங்கமோ அல்லது அமைப்புகளோ இல்லை என்று கூறலாம்.
அறிஞர் வ.ரா.,
'வ.ரா.,' என்று அறியப்படும் வ.ராமசாமி அய்யங்கார் (1889-1951) மிகப் பழமையான நம்பிக்கைகளை கொண்ட குடும்பத்தில் பிறந்து, புதுமையான எண்ணங்களோடு வாழ்ந்தவர்.நாட்டு விடுதலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
ஒரு முற்போக்குச் சிந்தனையாளராகவும் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரராகவும் விளங்கினார்.
தமிழ் மீது கொண்ட பற்றால் பல்வேறு இதழ்களில் பணியாற்றியவர். பங்கிம் சந்திர சட்டர்ஜியின் குறுநாவலை ஜோடி மோதிரம் என்ற பெயரில் மொழி பெயர்த்து, பாரதியிடம் பாராட்டுப் பெற்றவர் வ.ரா., அந்த பாரதியை 'மகாகவி' என நிலை நிறுத்திய பெருமை வ.ரா.,வையே சேரும்.
- மாயா மேயோ அல்லது மேயோவுக்குச் சவுக்கடி
- சுவர்க்கத்தில் சம்பாஷணை
- கற்றது குற்றமா
- மழையும் புயலும்
- வசந்த காலம்
- வாழ்க்கை விநோதங்கள்
- சின்ன சாம்பு
- சுந்தரி
- கலையும் கலை வளர்ச்சியும்
- வ.ரா. வாசகம்
- விஜயம்
- ஞானவல்லி
- மகாகவி பாரதியார்
- வாழ்க்கைச் சித்திரம்
இவர் எழுதியவை நான்கு நாவல்கள்; ஐந்து வாழ்க்கை வரலாறு நூல்கள்; ஆறு சிந்தனை நூல்கள்; இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் என மொத்தம் பதினேழு நூற்படைப்புகள் ஆகும்.
பாபநாசம் சிவன்
வர்ணங்கள், கீர்த்தனைகள், தரு பதம், கண்ணிகள், திருப்புகழ், நொண்டிச்சிந்து, வழிநடைச் சிந்து என பாபநாசம் சிவன் (1890 -1973) இயற்றிய பாடல்கள் ஆயிரக்கணக்கானவை. பக்தியும் பைந்தமிழ் உணர்வும் ஒரு சேர அவரிடம் காணமுடியும். அவர் பாடல்களைக் கேட்டால் நெஞ்சம் உருகும், கண்கள் நனையும், கருத்தை உருக்கும். எழுதிப் பாடும் வல்லமை பெற்ற அவர், எழுதாமல் நினைத்த போதெல்லாம் பாடும் ஆற்றல் பெற்றவர் அவர். பஜனைகளிலும் இசைக்கச்சேரிகளிலும் அவர் பாடல்கள் ஒலித்தன. இசை அறிஞர்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், மதுரை மணி அய்யர், லால்குடி ஜெயராமன் உள்ளிட்டோர் பாபநாசம் சிவனிடமே பாடல்களைக் கற்றுக் கொண்டனர். இவரது திரைப்படப் பாடல்கள் தமிழகத்தில் அனைத்துப் தரப்பினரையும் கவர்ந்ததாக இருந்தது.
தமிழ் வளர்த்த அறிஞர்கள் : சுத்தானந்த பாரதியார்
சிவகங்கையில் ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக பிறந்தார் சுத்தானந்தர் (1891 - 1990). அவரின் பிள்ளை திருநாமம் வேங்கட சுப்பிரமணியன். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான் சுத்தானந்தர், 'ஆயுட்காவியம்' என அப்பெரியாரே குறிப்பிட்டுக் கொள்ளும் 'பாரத சக்தி' மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை, ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில், சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று ஒன்பதாம் வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
பாவேந்தர் பாரதிதாசன்
இருபதாம் நூற்றாண்டில் புதுச்சேரியில் பிறந்த கனகசுப்புரத்தினம், மகாகவி பாரதியாரின் வழிகாட்டியாக கொண்டதால் தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார் (1891 - 1964). 1935 ஆம் ஆண்டு 'ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்' என்ற இந்திய நாட்டின் முதல் கவிதை இதழை துவங்கினார். பகுத்தறிவு கொள்கைக்கு உரமூட்டி, மக்களின் சிந்தனைப் போக்கில் புதிய மாற்றத்தை வடிவாக்கம் செய்து கொண்டிருந்த இவரை பெரியார் ஈ.வெ.ரா., 'தன்மான இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர்' எனப் புகழ்ந்துரைத்தார். பாண்டியன் பரிசு, குடும்பவிளக்கு, ஆத்திசூடி, இருண்ட வீடு, இசையமுது உள்ளிட்ட ஒப்பற்ற நூல்களை எழுதியுள்ளார்.
தமிழ் வளர்த்த அறிஞர் பொ.திருகூட சுந்தரம் பிள்ளை
'புதிய பார்வையுடன் கூடிய புதிய செய்திகளை உணர்த்துவதன் மூலமே, தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் புதிய நலம் மேவச் செய்ய முடியும்' என்ற கருத்தை உறுதிமொழியாக ஏற்றுக் கொண்டிருந்தவர் அறிஞர் திருகூட சுந்தரம் பிள்ளை(1891 - 1969). குழந்தைகளின் சிந்தனைகளை மேம்படுத்த 'அப்பாவும் மகனும்', 'கேள்வியும் பதிலும்' ஆகிய இரு நூல்களை இயற்றினார். ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே குடும்பக் கட்டுப்பாடு பற்றி தமிழில் நூல் உருவாக்கிய அறிஞர் இவர் தான். மகாத்மா காந்தியை பின்பற்றிய இவர் வாழ்வு முழுவதும் ஒரு வேட்டியும், துண்டுமே உடையாக அணிந்திருந்தார். இவருடைய தமிழ்த் தொண்டைப் பாராட்டிப் போற்றிச் சிறப்பித்து 1958ஆம் ஆண்டு, சென்னை பாரதியார் சங்கம் கேடயம் வழங்கி மகிழ்ந்தது.
பெ.நா.அப்புஸ்வாமி
பெங்குளம் யக்ஞ நாராயண அப்புஸ்வாமி (1891 - 1986) என்பது அவரது முழுப்பெயர். பாரதியார் தமிழோசை உலகம் முழுவதும் பரவ வேண்டும் என ஆசை கொண்டார். அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் தமிழ் இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை போன்றவற்றை ஆங்கில மொழியில் மொழி மாற்றம் செய்து, 'Tamil Verse in Translation' எனத்தலைப்பிட்டு ஒரு பெருநூல் உருவாக்கினார். இந்நூல் 1987ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
ஆர்.கே.சண்முகம் செட்டியார்
சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதி பதிப்பித்தவர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் (1892-1953). தமிழிசையில் பண்களைப் பற்றி ஆராய்வதில் விருப்பம் கொண்ட இவர், பண் ஆராய்ச்சிக் குழுவை உருவாக்கினார்.ஆங்கில மொழியிலும் அறிஞராகத் திகழ்ந்தவர். சமய நம்பிக்கை, இறை பக்தி மற்றும் தமிழ்ப் பற்றுக் கொண்டவராக விளங்கினார். அரசு தமிழில் நடக்க வேண்டும். சட்டசபையில் தமிழில்தான் பேச வேண்டும். பொருளாதாரத்தையும் அறிவியலையும் தமிழில்தான் கற்க வேண்டும் என்று பெரிய விருப்பம் கொண்டிருந்தவர் இவர்.
சுவாமி விபுலானந்தர்
இலங்கைத் தமிழர்களிடையே பாரதியாரின் பெருமைகளை பரப்பியவர் சுவாமி விபுலானந்தர் (1892-1949). அங்கிருந்த அடக்குமுறைகளுக்கு அச்சசமில்லாது, தமிழகத்தில் நடந்த பாராட்டு விழாக்களுக்கு வந்து செசன்றவர். திரிகோணமலை இந்துக் கல்லூரியில் பாரதி படத்தைப் பார்த்த ஒருவர் இவரிடம் கேட்டார். 'யார் இந்த தலைப்பாக்கட்டு ஆசாமி' என்று? அதற்கு பதில் அளித்த விபுலானந்தர், 'தமிழனாகப் பிறந்திருந்தால், இந்த பெருங்கவிஞனைத் தெரியாமல் இருக்க முடியாது. பாரதியை அறியாதவன் தமிழன் என்று செசால்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும்' என்று கூறியவர்.இசைசத்தமிழ் பற்றி ஆய்வு செசய்த இவர், யாழ்நூல் எனும் நூலை வெளியிட்டார்.
அறிஞர் கந்தையாபிள்ளை
பத்துப்பாட்டு, அகநானூறு, பதிற்றுப் பத்து, கலிங்கத்துப்பரணி, பரிபாடல், கலித்தொகை உள்ளிட்ட சங்க நூல்களை உரைநடையில் வழங்கியவர் இலங்கையைச் சேர்ந்த அறிஞர் கந்தையாபிள்ளை (1893-1967). சங்க நூல்களின் பாடல்களை உரைநடைகளாக்கி, படித்தவர்களும் மாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் நூலாக வெளியிட்டவர் இவர். தமிழகம், தமிழர் யார், தமிழ் இந்தியா உள்ளிட்ட நூல்கள் மூலம் தமிழர்களின் மற்றும் தமிழின் பெருமையை அறியச் செய்தவர். தமிழைப் பேணி காப்பது தமிழரின் உயர் கடமை, உயிர்க் கடமை என்று கூறியவர்.
சாமிநாத சர்மா
சாமிநாத சர்மா (1895-1978) எழுதிய நூல்கள் அனைத்தும் தேசாபிமானத்தை தழைக்கச் செய்தவை. இவருடைய எழுத்துக்களை பாரதியார் விரும்பிப் படிப்பார். ஒருமுறை இவரிடம் பாரதியார், 'உம்முடைய எழுத்தில் உள்ள திண்மை, உமது உடலில் இல்லையே. வன்மை கொண்ட ஓர் உருவத்தை, உமது எழுத்தை வாசிக்கும் போதெல்லாம், என் மனத்துக்குள் கொண்டிருந்தேன். என் கணிப்பு உம்மை கண்டதும், சுக்குநூறாய் சிதறிப் போய்விட்டது' என்றார்.மெலிந்த தேகமும் மென்மையாகப் பேசும் இயல்பையும் கொண்டவர் சாமிநாத சர்மா. எழுத்துத்துறை, இதழியல் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஆகியவற்றில் இவரது திறனை காணலாம்.
சுத்தானந்த பாரதியார்
சிவகங்கையில் ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக பிறந்தார் சுத்தானந்தர் (1891 - 1990). அவரின் பிள்ளை திருநாமம் வேங்கட சுப்பிரமணியன். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை, ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில், சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று ஒன்பதாம் வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
மயிலை சீனி வேங்டசாமி
தமிழ் மொழியில் மறந்ததும், மறைந்ததுமான சிறந்த செய்திகள், அளவு கடந்து உள்ளன. அத்தகைய சீரிய செய்திகளை வெளிக்கொணர்ந்து, வீசிய உணர்வுடன் வெளியிட்ட வித்தகப் பெரும் புலவர், அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி (1900-1980) ஆவார். ஐந்திலக்கணங்களில் ஒன்றான யாப்பைப் பற்றி 'யாப்பருங்கல விருத்தி' என்னும் நூலை படித்தார் சீனி வேங்கடசாமி அவர்கள். இந்த நூலின் உரையாசிரியர், தமது உரை விளக்கத்தில், பல்வேறு நூல்களிலிருந்து சில செய்யுள்களை எடுத்துக் காட்டுகளாக இயம்பியிருந்தார். அப்படி எடுத்துக்காட்டுகளாக கூறிய நூல்கள், தற்போது எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மறைந்து போன, பேணிக் காக்கப்படாத அந்நூல்களைச் சற்றே எண்ணிப் பார்த்து, மனம் கலங்கினார் அறிஞர் சீனி. வேங்கடசாமி. 'அட்டா! எத்தனை, எத்தனை நூல்களைத் தமிழன்னை இழந்து விட்டாள்?' என நெகிழ்ந்து நெடுமூச்சு விட்டார் அப்பெரும் புலவர். இத்தகைய நூல்களின் பெயர்களை தொகுத்து வெளியிட நினைத்து, அதனை செயல்படுத்தினார் சீனி. வேங்கடசாமி.
'மறைந்து போன தமிழ் நூல்கள்' என மகுடமிட்டு, ஓர் அரிய திருநூலைப் படைத்த இப்பேரறிஞர்,' களப்பிரர் காலத் தமிழகம்' என்னும் ஆய்வு நூல் வெளியிட்டுப் பெருமை பெற்றார். இவை தவிர, 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' என்றோர் அரிய நூலை எழுதி வெளியிட்ட அப்பேராசானே, முதன் முதலில் அழகுக் கலைகள் பற்றித் தமிழில் எழுதிய பெருமை பெற்றார். 'கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு, சேரன் செங்குட்டுவன், மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன், மூன்றாம் நந்தி வர்மன் முதலிய நூல்கள் அறிஞர் சீனி வேங்கடசாமி வழங்கியுள்ள வரலாற்றுச் செல்வங்கள். இவர் தமிழின் வரலாற்றில், தனி ஓர் அத்தியாயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
சுவாமி ஞானப்பிரகாசர்
யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் சுவாமி ஞானப்பிரகாசர் (1857-1947). கொழும்பு ரயில் நிலையத் தலைவராக பதவி வகித்தவர். இவர் 70 மொழிகளைக் கற்றறிந்தவர். தமிழ் மொழிச் சொற்களோடு பிற மொழிச் சொற்களை ஒப்பிட்ட அறிஞர். வேர்ச்சொல் ஆராய்ச்சியில் இவருக்கு நிகர் இவரே. நம் முன்னோர்களின் மொழிப்புலமையை நன்கு வெளிப்படுத்தினார். இவருடைய ஆராய்ச்சியினால் தமிழ்மொழியின் முதன்மையை உலகம் உணர்ந்து கொண்டது. தமிழ்ச்சொற் பிறப்பகராய்ச்சி எனும் இவரது நூல் உலகப் புகழ் பெற்றது. சொற்பொருளில் தமிழ் சிறந்த மொழி என்பதையும் இவர் நிரூபித்தார்.



Comments
Post a Comment