உ. வே. சாமிநாதையர்

உ. வே. சாமிநாதையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search
உ.வே. சாமிநாதையர்
U. V. Swaminatha Iyer.jpg
பிறப்புபெப்ரவரி 19,1855
உத்தமதானபுரம், பாபநாசம்தமிழ் நாடு
இறப்புஏப்ரல் 28, 1942(அகவை 87)
பணிபதிப்பாளர்
அறியப்படுவதுஅழிநிலை நூல்களைப் பதிப்பித்தமை
சமயம்இந்து சமயம்
உ. வே. சாமிநாதய்யர் (பெப்ரவரி 19,1855 – ஏப்ரல் 281942,) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழறிஞர். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத்தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.[1]

பொருளடக்கம்

வாழ்க்கை

சாமிநாதன் பிப்ரவரி 19, 1855ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில்  உள்ள "உத்தமதானபுரம்" எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க்கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திருச்சிராப்பள்ளி மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.

உ.வே.சா எழுதிய என் சரித்திரம்

உ.வே.சா வாழ்க்கையின் சிறப்பு

உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், தோன்றியிருக்காவிட்டால் தமிழுலகிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கும். அகநாநூற்றிற்கும் புறநாநூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றி பதிப்பித்து நமக்குத் தந்தவர் உ.வே.சா. மேலும், தன்னுடைய சொத்துக்களை கூட விற்று, பல தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பித்தார் இந்த தமிழ்த்தாயின் தலைமகன். இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகள் தாராளம், பட்ட சிரமங்களோ ஏராளம். இருந்தும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.
சங்க இலக்கியங்களைப்பற்றி இன்று நம்மால் பேசமுடிகிறது என்றால் அதற்கு உ.வே.சா காரணமாவார். சங்ககால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிகிறது என்றால் உ.வே.சா தான் காரணம். இவ்விலக்கியங்கள் இல்லாத தமிழையும் தமிழிலக்கியத்தையும்நினைத்துக் கூடப்பார்க்க முடியாது.
இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளை பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்துவிட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருள் விளங்கும்படி செய்தார். ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி, இந்த நூல்களை குறித்த முழுபுரிதலுக்கும் வழிவகுத்தார். அவர் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர் மறைந்த காலத்தில் உயர்ந்து நின்ற தமிழின் நிலைக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு போன்றதாகும்.
சீவகசிந்தாமணியைக் கற்றுக் கொடுக்கமுயன்ற போது ஏட்டுச்சுவடியிலிருந்த நூலை மிகுந்த சிரமத்திற்கிடையில் கற்று பாடம் சொல்லிக் கொடுத்ததால் இந்த நூலில் உள்ள செய்திகளை உணர்ந்தவர், இந்த நூலை 1887 ஆண்டு முதன்முதலாக வெளியிட்டாா்கள். தமிழர்கள் அளித்த நல்லூக்கம் இப்பணியை அவர் தொடர்ந்து செய்ய காரணமாயிற்று. இவருடைய வாழ்க்கை வரலாறு தமிழ்பால் அன்பு கொண்ட அனைவரும் போற்றும் ஒரு பொக்கிஷம்.
சிறிய வயதில் இவரிடம் யாராவது ஆங்கிலம் இவ்வுலக வாழ்விற்கும், வடமொழி அவ்வுலக (ஆன்மீக) வாழ்விற்கும் பயன்படும் என அறிவுறுத்தினால், என் அன்னை தமிழானது இவ்வுலகம் மற்றும் அவ்வுலக வாழ்வு இரண்டிற்கும் இன்றியமையாதது என கூறுவாராம்.
இவர் குடும்பம் தீராத வறுமையில் வாடியது. தமது குடும்பம் பிழைப்பதற்கும் இவர் கல்வி கற்பதற்கும் இவர் தந்தை மிகுந்த முயற்சி எடுத்துள்ளார்கள். அக்காலத்தில் இவர் குடும்பம் ஒரு ஊரில் நிலையாகத் தங்குவதற்கு வசதியில்லாமல் ஊர்ஊராகச் இடம்பெயர்ந்து வாய்ப்புகளைத் தேடியலைந்துள்ள போதிலும், மனம் தளராமல், இவ்வளவு கடினமான சூழ்நிலையில் தமிழை விடாமுயற்சியுடன் கற்றுக்கொண்டுள்ளார். இவர் பிற்காலத்தில் அடைந்த இமாலய வெற்றிக்கு இவர் கற்ற கல்வியும், குடும்பத்தின் தியாகமும், விடாமுயற்சியும் பெரும் அடித்தளமாக அமைந்தது.
தமிழாசிரியர் எங்கு கிடைப்பாரோ என்று தேடித்தேடி, அதன் தொடர்ச்சியாக குடும்பம் முழுவதும் தமிழாசிரியர் இருக்கும் இடத்திற்கு குடி பெயர்ந்து விடும். படித்த புலவர்கள் யாரைப்பார்த்தாலும் இவரிடம் தமிழ் கற்றுக் கொள்ள முடியுமா என்றுதான் தம் உள்ளம் ஏங்கியதாக இவர் குறிப்பிட்டுள்ளார்கள். “இவர்கள் பெரிய வித்துவான்களாக இருக்க வேண்டும். இன்று பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று உவேசா பதிவுசெய்கிறார்

உத்தமதானபுரம் மக்கள் அவர்தம் வாழ்க்கை

உவேசா தாம் பிறந்த உத்தமதானபுரத்தின் பெயர்க்காரணம் பெருமையையும் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் மனப்பான்மையும் வாஞ்சையோடு பேசுகிறார்கள். எவ்வாறு அவ்வூர் மக்கள் நிறைமனத்தினராயும்,சோம்பலை அறியாதவர்களாகவும், நவீன நாகரிகத்தின் வாசனை சிறிதளவும் வீசாமல், உள்ள வளத்தை பங்கிட்டு அமைதியாக வாழ்க்கை நடத்தினர் என்று உணர்வு பூர்வமாக குறிப்பிடுகின்றார்கள். இவர் குடும்பம் இசையும் தமிழும் கலந்த குடும்பம். இவ்வழியில் வந்த உவேசா இவைகளில் தேர்ந்த ஞானம் பெற்றிருந்தார் என்பதில் வியப்பில்லை. அக்காலத்தில் வேளாண் நிலத்தை “போக்கியத்திற்கு” விடும் பழக்கம் இருந்தது, உழவர்கள் கடன்படுவது இயற்கை மற்றும் பெண்கள் குறிப்பாக மருமகள், வீட்டில் மாமனாரிடமும், மாமியாரிடமும் சொல்லொணாத் துயரடைந்தனர் என்றும் சமுக வாழ்க்கை பற்றிய பல செய்திகள் இயல்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ஆசிரியர்கள் மற்றும் சில புகழ் பெற்றவர்களைப்பற்றியும் அவர்கள் வாழ்க்கை பற்றியும் பல செய்திகளை அறிய முடிகிறது.

உவேசாவின் பிறப்பு

ஆனந்த வருடம்மாசி மாதம் 9 ஆம் தேதி திங்கட்ழமை (19-02-1855) அன்று உவேசா பிறந்தார். இவர் சாதகமும் தன்னுடைய ‘என் சரித்திரத்தில்’ குறிப்பிட்டுள்ளார். இவர் தந்தை குடும்பம் நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டுள்ளார். பல வேளாண்குடிப் பெருமக்கள் உதவி செய்துள்ளனர். அவர்கள் அனைவரையும் உவேசா நினைவு கூறுகிறார். இவர் தந்தை பல இடங்களுக்குச் சென்று இராமாயண விரியுரை நடத்திவந்தார். இது போன்று விரிவுரை செய்பவர்களுக்கு பலர் உதவி செய்து வந்துள்ளனர் என்னும் செய்தி பல இடத்தில் வருகிறது. உவேசா தமது இளம்வயதில் தமது பாட்டனாரிடமும் ஒரிரண்டு திண்ணைப்பள்ளிகளிளும் கல்வி பயின்றுள்ளார். இளம் வயதை அரியலுரில் கழித்திருந்தாலும் பிழைப்பைத்தேடி உவேசா குடும்பம் ஊர்ஊராகப் பல ஊர்களுக்குச் சென்று வந்துள்ளது. திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அரிச்சுவடி, எண்சுவடி முதலிய கற்றுக் கொடுத்துள்ளனர். ஏட்டில் எழுதவும் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் காகிதம் பள்ளிக்கூடம் வரை வரவில்லை, சிலேட்டும் இல்லை. முதலில் மாணவர்கள் மணலில் எழுதிப்பழக வேண்டும் பின் எழுத்தாணியால் ஒலைச்சுவடியில் எழுதக்கற்றுக்கொள்ள வேண்டும் அன்றையப் பள்ளிகள் எவ்வாறு செயல்பட்டன என்பதை தெளிவாக அறிய முடிகிறது.
உவேசா சிறுவயதில் விளையாட்டிலும் இசையைக் கற்பதிலும் ஆர்வமுடையவராயிருந்தார் ஆனாலும் அவர் தந்தையவர்கள் உவேசா விளையாடுவதை விரும்பியதில்லை. எப்பொழும் படித்துக்கொண்டே இருக்கவேண்டுமென்று விரும்பினார். தமது சிறிய தந்தையாரிடம் இயற்கையாகவே இசையில் ஆர்வமுள்ள உவேசா இசை பயின்றாா்கள். ஆங்கிலம் கற்றுக் கொள்வது அக்காலத்தில் மிகவும் பெருமைப்படும் செயல். உவேசாவிற்கு சிறுவயதில் ஆங்கில எழுத்துக்கள் மட்டும் கற்கும் வாய்ப்பு கிட்டியது. சடகோபஐயங்காரே தமக்கு தமிழில் ஆர்வம் உண்டாகும் வண்ணம் முதன் முதலில் கற்பித்தாா் என்று உவேசா தெரிவிக்கின்றார்கள். அரியலுரில் தம் குடும்பம் மிக்க வருமையில் வாழ்ந்து வந்ததையும் பதிவு செய்கின்றார்.கல்வி கேள்வி இல்லாதவரும் அக்காலத்தில் கல்வி அறிவுடையவர்களைக் கண்டால் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து ஆதரிப்பதில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டுள்ளனர் என்றும் தெறிய வருகிறது.
உவேசாவின் தந்தை இவருக்கு நல்ல கல்வி கற்பித்

Comments

Popular posts from this blog

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

எட்டுத்தொகை

பத்துப்பாட்டு